அப்பா பெயரை கெடுத்துடாதப்பா… குடித்துவிட்டு இளம் நடிகையுடன் ஜல்சா பண்ணும் துருவ் விக்ரம்? லீலைகள் லீக்!
Author: Shree29 July 2023, 4:58 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் 1992ம் ஆண்டு சைலஜா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு அக்ஷிதா, துருவ் விக்ரம் என ஒரு மகள் ஒரு மகன் இருகிறார்கள். இதில் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
முதல் படத்திலே ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடிய துருவ் நல்ல பரீட்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். தொடர்ந்து அதன் பிறகு தனது தந்தை விக்ரம் உடன் மகான் படத்தில் நடித்திருந்தார். துருவ் விக்ரமுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இதனிடையே ஆதித்ய வர்மா திரைப்படத்தில் தன்னுடன் நடித்த ஹீரோயின் பனித்தா சந்துவுடன் நெருக்கமாக பழகி வருவதோடு அவருடன் டேட்டிங் செய்து வருகிறாராம். அதுமட்டும் அல்லாமல் மது போதையில் நடிகையுடன் உல்லாசமாக இருந்து வருவதாக சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஏற்கனவே கூறியிருந்தார்.
மேலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை அவருடன் சேர்ந்து தான் கொண்டாடியதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. துபாய் ஓட்டல் அறையில் நெருக்கமாக முத்தமிட்ட புகைப்படங்கள் லீக்காகி சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை பார்த்து உங்க அப்பா இந்த இடத்துக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாரு.. ஆனால் இப்படி வாய்ப்புகளை சீரழிக்குறயேப்பா என திட்டி வருகிறார்கள். ஆனால், உண்மையில் அது பனித்தா சந்து தானா என்பது தெரியவில்லை.