இந்த குட்டி பையன் இப்போ தமிழ் சினிமாவின் பிரபல ஹேண்ட்ஸம் ஹீரோ – யாருன்னு தெரியுதா?

Author: Shree
23 September 2023, 5:13 pm

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். முதல் படத்திலே ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடிய துருவ் நல்ல பரீட்சியமான நடிகராக பார்க்கப்பட்டார்.

தொடர்ந்து அதன் பிறகு தனது தந்தை விக்ரம் உடன் மகான் படத்தில் நடித்திருந்தார். துருவ் விக்ரமுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவருக்கு இளம் பெண் ரசிகைகள் கூட்டம் அதிகம் தான். அதனால் துருவ் விக்ரம் படங்களுக்கு நல்ல மவுஸ் உண்டு.

dhruv vikram - updatenews360

முதல் படத்தில் தனக்கு ஹீரோயினாக நடித்த பனித்தா சந்துவுடன் நெருக்கமாக பழகி காதலித்து வருவதாக அவ்வவ்போது செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால், இதனை இருவரும் உறுதிப்படுத்துவே இல்லை. இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் ஹோட்டல் ஒன்றில் இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்ட புகைப்படம் ஒன்று லீக்காகி பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த நேரத்திலும் இருவரும் காதலிப்பதாக மூச்சு கூட விடவில்லை. பின்னர் இருவரும் ஹோட்டல் ஒன்றின் படுக்கையறையில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோக்களை அவர்களே வெளியிட்டு அதிர வைத்துவிட்டார்கள்.

துருவ் விக்ரம் பனிதா சந்துவிற்கு ஆடை அணிவித்து விட்டு உச்சகட்ட காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த செய்தி கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது துருவ் விக்ரமின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரா இது செம கியூட்டா இருக்காறேப்பா என எல்லோரும் லைக்ஸ் குவித்துள்ளனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 380

    0

    0