ரஜினியின் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு ஏமாற்றினாரா தனுஷ்? ரகசியத்தை உடைத்த பிரபலம்!

Author: Shree
15 June 2023, 8:23 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. 2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே நடிகர் தனுஷ் ரூ.150 கோடி செலவில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் ஒரு பரஸ்பர மனதோடு பிரிந்து வாழ்கிறார்களே தவிர விவாகரத்து செய்யவில்லையாம். இதற்கு காரணம் ரஜினியின் சொத்துக்கு தனுஷ் ஆசைப்படுவதாக செய்திகள் வெளியானது.

இது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில், ஆம், கிட்டத்தட்ட ரஜினியின் சொத்துக்கள் தனுஷுக்கு தான் சேரப்போகிறது. ரஜினிக்கு பிள்ளைகள் இல்லை. எனவே மருமகன்களை தான் அவர் பிள்ளையாக பார்க்கிறார். அப்படியிருக்கும் போது யாரும் கேட்காமலே மொத்த சொத்துக்களையும் தன் பேரப்பிள்ளைகளுக்கு தான் கொடுக்கப்போகிறார். அப்படியிருந்தும் தனுஷ் நன்றி மறந்துவிட்டார். ரஜினி ஆசைப்படுவதெல்லாம் ஒன்று தான்… தன் மகள்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பது தான். ஆனால் அதுவே இல்லை என ஆகிவிட்டதால் அவர் விரக்தியடைந்துவிட்டாராம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 348

    0

    0