என்னது.. பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி இல்லையா?.. புதிய கதாநாயகன் குறித்து பேசிய இனியா தாத்தா..!

Author: Vignesh
8 March 2023, 4:14 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi - updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது.

இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.

baakiyalakshmi gopi- updatenews360

இனி இவர் தான் இந்த சீரியலின் கதாநாயகனாக வருவார் என்று கோபியே ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இனி சீரியலில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்காது என்று கோபியே வீடியோவில் தெரிவித்து உள்ளார்.

baakiyalakshmi gopi- updatenews360

இந்நிலையில், இனி பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்குமா அல்லது இருக்காதா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இனி கோபி சீரியலில் இருப்பாரா மாட்டாரா என்பது குறித்து அதே சீரியலில் இனியாவின் தாத்தாவாக வரும் ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரோசரி வெளிப்படையாக பேசியுள்ளார்.

baakiyalakshmi gopi- updatenews360

அதில் அவர் கூறியதில் ‘அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்றும், கோபிக்கான காட்சிகள் வந்துகொண்டே தான் இருக்கும் எனவும், அவர் ஒரு சிறந்த நடிகர் என்றும், ரஞ்சித்தின் காட்சிகள் ஒரு ட்ராக் என்றால் கோபியின் காட்சிகள் ஒரு ட்ராக் கண்டிப்பாக வரும்’ என தெரிவித்துள்ளார்.

baakiyalakshmi - updatenews360

மேலும் அவர் கூறுகையில், ‘பாக்கியலட்சுமி சீரியலில் அனைவருக்கும் சமமான காட்சிகள் இருக்கும் என்றும், அதே போல் கோபிக்கும் கண்டிப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 790

    0

    0