கர்ப்பகாலத்தில் மனைவிக்கு இதையெல்லாம் செய்தாரா ஜெயம் ரவி?

Author: Shree
6 November 2023, 5:42 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

aarti ravi

ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவி கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அருண்மொழிவர்மனாக நடித்திருந்தார். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தியுடன் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டிகொடுத்துள்ள இந்த ஜோடி தங்கள் காதல் வாழ்க்கையில் நடந்த நிறைய ஸ்வாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

அப்போது மனைவிக்கு பிரசவத்தின் போது நடந்த நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். அதாவது, நான் கர்ப்பமாக இருந்தபோது என் கணவர் ஜெயம் ரவி என்னை மிகவும் அன்பாக பார்த்துக்கொண்டார். நான் உடல் சோர்வாக படுத்திருக்கும்போது என்கூடவே இருந்து என்னை பார்த்துக்கொள்வார். சில நேரங்களில் நான் வாந்தியெடுக்கும் போது அதை கையிலே ஏந்திக்கொண்டு செல்வார். எனவே ஒரு கணவராக அவருக்கு நான் 100/100 மார்க் கொடுப்பேன் என பெருமிதத்துடன் கூறினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 372

    0

    0