தாய் பாசத்துல நயன் செய்யும் அலப்பறை.. அபார்ட்மெண்டை காலி செய்தது இதனால் தானா?..

Author: Vignesh
11 June 2024, 10:39 am
nayanthara - updatenews360.jpg 2
Quick Share

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

nayanthara - updatenews360.jpg 2

மேலும் படிக்க: நிர்வாண காட்சியில் நடிக்கும் போது.. ராதிகா ஆப்தே சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து உள்ளார்

மேலும் படிக்க: அதுக்குள்ள விவாகரத்தா?.. திருமணத்திற்கு பின் எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கரின் மகள்..!

இந்நிலையில், நடிகை நயன்தாரா பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்றை வலைப்பேச்சு அந்தணன் கூறி இருப்பது ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நடிகை நயன்தாரா சென்னை எழும்பூர் அருகே இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தபோது, அங்கு தன்னுடைய மகன்களுடன் விளையாடுவதற்காக கீழே அழைத்து வருவாராம். அப்படி, ஒரு முறை அழைத்து வந்த போது ஒரு ஆட்டோ ஓட்டுநர் சவாரிக்காக வந்திருக்கிறார்.

nayanthara - updatenews360.jpg 2

அப்போது, குழந்தைகள் விளையாடும் பகுதியில் ஏன் இவ்வளவு ஸ்பீடா வரீங்க என கேட்டு நயன்தாரா அவரிடம் சண்டை போட்டுள்ளாராம். இதே போல், தான் ஒரு முறை உணவு டெலிவரி செய்ய வந்த ஒருவர் தான் டெலிவரி செய்ய வந்த நபரிடம் போனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தாராம். அவரிடமும், ஏன் இப்படி சத்தமா பேசுறீங்க குழந்தைகளுக்கு டிஸ்டப் ஆகுது இல்ல என கூறி சண்டை போட்டதாக அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

nayanthara - updatenews360.jpg 2

இதை பார்த்த நெட்டிசன்கள் தாய்பாசத்துல நயன்தாரா இப்படியெல்லாம் செய்கிறாரா என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என எதிர்மறையான கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர். ஆனால், தற்போது நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் பிரம்மாண்ட பங்களா கட்டி அங்கு குடியேறிவிட்டார். ஒருவேளை அப்பார்ட்மெண்டில் இப்படியான அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்ததால் தான் நடிகை நயன்தாரா அங்கிருந்து காலி செய்து விட்டாரா என்ற கேள்வியும் கேட்டக தோன்றியுள்ளது.

Views: - 95

0

0