நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல்?.. நடந்தது என்ன தெரியுமா?

Author: Vignesh
16 December 2023, 12:30 pm

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பின்னர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட்படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார்.

தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார். மேலும், Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படத்தினை பதிவிடுவார்.

இந்நிலையில், தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இவர் நடித்த படம் படுதோல்வி அடைந்தது. அதனால், பூஜாவின் தோல்படங்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இந்நிலையில், பூஜா சமீபத்தில் துபாய்க்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது ஒரு பிரச்சனை ஏற்பட்டது.

pooja hegde - updatenews360.jpg 1

வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் பாதியிலேயே கிளம்பி இந்தியாவிற்கு வந்து விட்டார். இந்த செய்தி பெரிதாக பேசப்பட்டது. அதன் பின்னர், பூஜா ஹெக்டேரவுக்கு சில நபர்களிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாக நேற்று செய்திகள் வெளியானது. அதைப்பற்றி ஒருவர் பதிவிட ட்விட்டரில் படு வைரலாகி பாலிவுட்டில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில், பூஜா தரப்பு கொலை மிரட்டல் எதுவும் வரவில்லை எல்லாமே வதந்தி என விளக்கம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ