செம சிம்பிளாக மலையாள நடிகையை 2-ம் திருமணம் செய்த சூரி?.. வைரலாகும் புகைப்படம்..!
Author: Vignesh21 January 2023, 10:35 am
தமிழ் சினிமாவில் நடிகர் சூரி முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது ஹீரோவாகவும் களமிறங்கி உள்ளார். வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்.
வெற்றிமாறனின் விடுதலை படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹீரோவாக புதிய படத்தில் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கி உள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை Anna Ben கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகிவுள்ளார்.
இந்த படத்தின் பூஜையில் நடிகர் சூரி மற்றும் மலையாள நடிகை இருவரும் மாலையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் ஷாக்காகி, இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா என்று கேள்வி கேட்க துவங்கிவிட்டனர்.
ஆனால், இது படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அதன்பின் தெரியவந்தது.