தமிழ் நடிகர்கள் எல்லோரும் தமன்னாவிடம் அப்படி நடந்துக்கொண்டார்களா? வேதனையை வெளிப்படையா சொல்லிட்டாங்க!

Author: Shree
15 July 2023, 4:54 pm

மும்பையை சேர்ந்த அழகிய நடிகையான தமன்னா பார்ப்பதற்கு பால் பப்பாளி போன்று பளபளன்னு அறிமுகமான புதிதிலே ரசிகர்களை கவர்ந்தார். 2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து வருகிறார்.

இதனிடையே சிரஞ்சீவியின் போலா சங்கர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இது குறித்த பேட்டி ஒன்றில் தமன்னா, தெலுங்கு நடிகர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக நடிகைகளை மதித்து அவர்களுக்கான மரியாதையை கொடுப்பார்கள் என பேசியுள்ளார்.

தெலுங்கு நடிகர்களை இவ்வளவு புகழ்ந்து பேசிய தமன்னா எத்தனையோ தமிழ் நடிகர்களுடன் நடித்தும் அவர்களை பற்றி ஒரு வார்தை கூட சொல்லவில்லையே. தமிழ் நடிகர்கள் எல்லோருமேவா தமன்னாவிடம் மோசமாக நடந்துக்கொண்டார்கள்? என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. அல்லது தெலுங்கில் படவாய்ப்பை இப்படி பச்சோந்தியாக மாறுகிறாரோ? என கோலிவுட் சினிமா விமர்சித்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ