பிரபல நடிகைகளை குதிரை என விமர்சித்தாரா விஜய்? பிரபலம் சொன்ன தகவலால் வெடித்தது சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2022, 1:46 pm

இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு படத்தில் விஜய்யின் சகோதரனாக ஷாம் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களுமே ஒரே நாளில் நேரடியாக மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாரிசு படம் ஜனவரி 12ம் தேதியும் அஜித்தின் துணிவு படம் அதற்கு ஒரு நாள் முன்னதாக ஜனவரி 11ம் தேதியே வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் நாளே அதிக வசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக துணிவு ஒரு நாள் முன்னதாக வெளியாக உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இந்த நிலையில் வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகர் ஷாம், பிரபல சேனலுக்கு பேட்டி அளித்துள்ள வீடியோ அஜித் – விஜய் ரசிகர்களிடையே மோதலை வெடித்துள்ளது.

அப்படியென்ன தகவலை ஷாம் சொன்னார் என்றால், விஜய்யின் குஷி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷாம் 12 பி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தில் ஷாமுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் சிம்ரன் நடித்திருந்தனர். அந்த சமயத்தில் ஷாமிடம் பேசிய நடிகர் விஜய் யாருடா நீ.. வரும்போதே ரெண்டு குதிரங்க சிம்ரன், ஜோதிகாவை ஓட்டிட்டு வரன்னு கேட்டார் என்று பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான சிம்ரன் மற்றும் ஜோதிகாவை நடிகர் விஜய் ஆஃப் ஸ்க்ரீனில் எப்படி பேசலாம் என அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து விளாசி வருகின்றனர். இதன்மூலம் சமூக வலைதளங்களில் விஜய் – அஜித் ரசிகர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!