விட்டதை பிடித்த ‘தில் ராஜு’…திடீரென அடித்த லக்கால் நிம்மதி பெருமூச்சு..!
Author: Selvan9 February 2025, 5:52 pm
ரூட்டை மாற்றிய தில் ராஜு
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு.தமிழில் இவர் விஜய் நடித்த வாரிசு திரைப்படடத்தை எடுத்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
இதையும் படியுங்க: காமெடி என்ற பெயரில் VJ சித்து அடாவடி…குமுறும் நெட்டிசன்கள்..!
பொதுவாகவே இவர் தயாரிக்கும் படங்கள் எல்லாமே அதிக பொருட்செலவு செய்வார்,அந்த வகையில் சமீபத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படம் தில் ராஜுக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்தது.
இப்படத்தில் வரும் பாடல்களுக்கு மட்டும் 75 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர்,பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சர் படம் தில் ராஜுவின் காலை வாரியாது,இதனால் 200 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு பெரும் சோகத்தில் இருந்த அவருக்கு,அவருடைய இன்னொரு படம் பெரும் ஆதரவு அளித்துள்ளது.
நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்,மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘சங்கராந்தி வஸ்துனம்’ இப்படம் சமீபத்தில் வெளியாகி கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது.இப்படத்திற்கு தில் ராஜு வெறும் 60 கோடி மட்டுமே செலவு செய்துள்ளார்.
இதனால் பெரும் லாபத்தை பெற்ற அவர் இனி பெரிய ஹீரோக்கள் பெரிய இயக்குனர்கள் கதையை நம்பாமல்,சின்ன பட்ஜெட்டில் நல்ல கதையை கொண்ட படங்களை தயாரிக்க முடிவு எடுத்துள்ளதாக சமீபத்தில் நடந்த விநியோகிஸ்தர்களுக்கான கூட்டத்தில் வெளிப்படையாக கூறியுள்ளார்.மேலும் இயக்குனர் ஷங்கர் கேம் சேஞ்சர் தோல்விக்கு பிறகு என்னிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை என்ன வருத்தமாக தெரிவித்தார்.