‘மூக்குத்தினு சொல்லி சொல்லி பின்னாடியே சுத்தற வேலைதான்… ராபர்ட் குறித்து ரச்சிதா முன்னாள் கணவர் கோபத்தோடு போட்ட பதிவு!!

Author: Vignesh
12 November 2022, 5:15 pm


பிக்பாஸ் 6வது சீசனில் மக்கள் எதிர்ப்பார்த்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ரச்சிதா, இவர் விஜய் டிவியில் இருந்து விலகி கடைசியாக கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வந்தார்.

அந்த தொடர் முடிவதற்கும் ரச்சிதா பிக்பாஸில் நுழைவதற்கும் சரியாக இருந்தது. தற்போது ரச்சிதாவிடம், ராபர்ட் மாஸ்டர் செய்துவரும் வேலைகள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரச்சிதா தெளிவாக தனது பக்கம் இருப்பதை கூறியும் விடாது தொந்தரவு செய்து வருகிறார்.

தினேஷ் பதிவு

Rachitha-Dinesh-updatenews360-1


இதனால் ரசிகர்கள் We Stand For Rachitha என பதிவு செய்து வருகிறார்கள். அதேபோல் ரச்சிதாவின் முன்னாள் கணவரும் ரச்சிதாவிற்கு ஆதரவு தெரிவித்து போஸ்ட் போட்டுள்ளார். அதில் அவர், இதை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன், மேலும் இதற்கு நானும் ஆதரவு அளிக்கிறேன்.

ஒரு பெண் நட்பாக எல்லோரிடமும் மகிழ்ச்சியாக இருப்பதால் அவள் எல்லாத்துக்கும் சரி என்று சொல்லிவிடுவாள் என்று அர்த்தம் இல்லை. எல்லா மனிதர்களும் அமைதியான சுதந்திரத்துடன் வாழ வசதியான சமுதாயத்தை உருவாக்க சில முட்கள் போன்ற மனிதர்கள் எறிய வேண்டும் என்ற பதிவை போஸ்ட் செய்து இருக்கிறார்.

இதோ பாருங்கள்,

rakshitha- updatenews360
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!