சினிமாவ கேவலமா பேசி அதுல சோறு திங்குறயே உனக்கு வெட்கமா இல்ல.. Blue Sattai மாறனை விமர்சித்த இயக்குனர் பாண்டியராஜ்…!

Author: Rajesh
15 March 2022, 1:06 pm

ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும்,’ப்ளூ சட்டை’ மாறனின் விமர்சனத்தை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். அதேசமயம், படம் எடுக்கும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து தனது பாணியில் அதிரடியாக ‘ப்ளூ சட்டை’ மாறன் சொல்லும் விமர்சனம் சினிமா துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தும்.

குறைசொல்வது சுலபம், ஆனால் படம் பண்ணுவது கடினம் என்று இவரது விமர்சனத்தை சுட்டிக்காட்டும் விமர்சகர்களுக்கு சவால் விடும் படமாக
‘ப்ளூ சட்டை’ மாறனின் ஆன்டி இந்தியன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

இருப்பினும், பாரதிராஜா உள்பட பல மூத்த இயக்குனர்கள் ஆன்டி இந்தியன் படம் பார்த்து ‘நீ சாதிச்சுட்டடா… எங்களை விமர்சிக்க உனக்கு தகுதி இருக்குடா’ என்று புகழ்ந்திருந்தனர். இதை ஆயுதமாக எடுத்து கொண்ட ‘ப்ளூ சட்டை’தங்போது நடிகர்களை விமர்ச்சிப்பதில் எல்லை மீறி வருகிறார்.

சமீபத்தில், வெளிவந்த வலிமை திரைப்படம் திரையங்குகளில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. அதில், அஜித் முகத்தில் தொப்பை விழுந்திருக்கிறது, டான்ஸ் ஆடுவது மாவு பிசைவது போல இருக்கிறது என்றெல்லாம் ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் ட்ரோல் செய்து இருந்தார். அஜித்தை இப்படி பேசியதற்கு பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தையும் விமர்சித்தார். இப்படி கலாய்த்தல் தனக்கு அதிக பார்வையாளர்கள் வருகின்றனர் என்ற திமிரில் இதை மீண்டும் மீண்டும் செய்கிறார்.
இவரின் இந்த நடவடிக்கைக்கு இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் தக்க பதிலடி ஒன்றை சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.

  • Sawadeeka Song Lyric Video Releaseபோடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
  • Views: - 1341

    0

    0