அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த திரைப்படம் ரூ. 340 கோடியை வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இயக்குனர் அட்லீ, இந்தியில் ஷாரூக்கானை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை அட்லீ இயக்குவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. அட்லீ கூறிய கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்துப் போகஇ புஷ்பா 2ம் பாகத்திற்கு பின்னர் கால்ஷீட் தேதி கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.