சூடான இட்லி…. ஆவி பறக்கும் அட்லீ – ஜவான் ரிலீஸ்க்கு முன்பே சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திட்டாரேப்பா!
Author: Shree2 August 2023, 3:05 pm
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார்.
அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் அட்லீ இயக்கிய அத்தனை படமும் வேறு படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என ரசிகர்களால் அப்பட்டமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அதே போல் தற்போது இந்திக்கு சென்றும் காப்பியடிச்சான் வேலை பார்த்துள்ளார் அட்லீ. ஆம், ஜவான் படத்தின் சண்டை காட்சி ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் இருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பாலிவுட் கிங் ஷாருக்கானை இயக்குவதால் அட்லீயின் மார்க்கெட் டாப் இடத்திற்கு உயர்ந்துவிட்டது. எனவே ஜவான் படத்தை அடுத்து அட்லீ சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க போகிறார்.
இப்படத்திற்காக அட்லீக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசி ரூ.10 கோடி வரை அட்வான்ஸ் தொகையை கொடுத்து வைத்திருக்கிறதாம். ஜவான் படத்திற்காக அட்லீ ரூ30 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது கிட்டத்தட்ட டபுளாக உயர்த்தியுள்ளதை பார்த்து கோலிவுட்டே அதிர்ந்துவிட்டது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் ” ஜவான் படத்தால் சூடான இட்லி…. ஆவி பறக்கும் அட்லீ” என அவரது மார்க்கெட் ரேஞ்சை வைத்து மீம்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.
இப்படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பாலிவுட் கிங் ஷாருக்கானை இயக்குவதால் அட்லீயின் மார்க்கெட் டாப் இடத்திற்கு உயர்ந்துவிட்டது. எனவே ஜவான் படத்தை அடுத்து அட்லீ சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க போகிறார். இப்படத்திற்காக அட்லீக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசி ரூ.10 கோடி வரை அட்வான்ஸ் தொகையை கொடுத்து வைத்திருக்கிறதாம். ஜவான் படத்திற்காக அட்லீ ரூ30 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது கிட்டத்தட்ட டபுளாக உயர்த்தியுள்ளதை பார்த்து கோலிவுட்டே அதிர்ந்துவிட்டது.