அதுக்குள்ள 1 வயசு ஆகிடுச்சா? வெளிநாட்டில் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய அட்லீ..!
Author: Vignesh1 February 2024, 9:04 am
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.
அதையடுத்து அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 8 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அட்லீ தொடர்ந்து திரைப்படம் இயக்குவதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது மகனின் முதல் பிறந்த நாளை அட்லீ மற்றும் பிரியா வெளிநாட்டில் கொண்டாடியுள்ளனர். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை அட்லீ தனது இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவரது மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.