18 ஆண்டு திருமண வாழ்க்கை முறிவு…மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் இயக்குநர் பாலா: திரையுலகினர் அதிர்ச்சி..!!

Author: Rajesh
8 March 2022, 10:43 am

18 வருட மண வாழ்க்கையை முறித்து இயக்குநர் பாலா தனது மனைவி முத்துமலரை விவாகரத்து செய்துள்ளார்.

சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரமின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படம், தேசிய விருது, தமிழக அரசின் மாநில விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றது. சூர்யாவுடன் நந்தா, ஆர்யாவுடன் நான் கடவுள், விஷாலுடன் அவன் இவன், அதர்வாவுடன் பரதேசி என பாலாவின் படங்கள் அனைத்துமே அந்ததந்த நடிகர்களின் திரைவாழ்க்கையில் மிக முக்கிய படங்களான அமைந்தன.

இயக்குனர் பாலாவும் சரி, அவரது படங்களும் சரி சற்று கரடுமுரடாக தான் இருக்கம். அதிலும் அவர் மீது நீண்ட நாட்களாக இருக்கும் குற்றச்சாட்டு, படப்பிடிப்பில் மிக கடுமையாக நடந்து கொள்கிறார் என்பதுதான்.

சில வருடங்களுக்கு முன், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாக இருந்த அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

முழு படப்பிடிப்பும் முடிந்து தயாரிப்பாளருக்கு படம் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் தூக்கி போட்டுவிட்டார், இருந்தாலும் விக்ரமின் மகனின் எதிர்காலம் கருதி படத்தில் இருந்து ஒதுங்கினார். இவரின் சாபம் படி படமும் ஓடவில்லை.

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டலும் அதன் சீற்றம் குறைவதில்லை என்பது போல் தற்போது ராமநாதபுரம் பகுதியை சுற்றிய கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவரின் படங்களில் ஹீரோயின் பார்பதற்கு கொடூரமாக இருப்பார்கள். ஆனால் இவரின் மனைவி தற்போதைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் அழகில் மின்னுவார். இவரின் மனைவியின் பெயர் முத்து மலர். இந்நிலையில், நேற்று முன்தினம் பாலா – முத்துமலர் இருவரும் சுமுகமாக விவாகரத்து பெற்று முழுமையாக பிரித்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இருவரின் விவாகரத்து செய்தி, திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1480

    1

    0