சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பாலா. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை உருவாக்கி தந்த பெறுமை இவரைச் சேரும். விக்ரம் என்ற மாபெரும் கலைஞனை சேது திரைப்படத்தில் உருவாக்கி, நந்தா திரைப்படத்தின் மூலம் இன்று ஆஸ்கார் விருது வரை செல்லக் கூடிய அளவிற்கு சூர்யாவின் நடிப்பின் திறமையை வெளிஉலகிற்கு கொண்டு வந்தவர் தான் இந்த பாலா.
நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார். பெரும்பாலும் இவரது படங்கள் அனைத்து விளிம்பு நிலை மக்களைப் பற்றி பேசுவதாகவே இருக்கும்.
இவருடைய படங்களில் ஹீரோ, ஹீரோயின்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏனென்றால் இவர் படத்தில் நடிகர், நடிகைகளை அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றிவிடுவார்.
நடிகர்களிடம் திறமையான நடிப்பை வாங்குவதில் கைவந்த இயக்குனரான இவர், சில சமயங்களில் நடிகர்களிடம் இருந்து வேலை வாங்கும் பொழுது கொஞ்சம் கோபப்பட்டு கைநீட்ட கூடியவர் என்றும் தெரிகிறது. பாலாவிடம் அடிவாங்கி வளர்ந்த நடிகர்கள் ஏராளம். தற்போது உள்ள சூழ்நிலையில், ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கினால் இதுபோன்று அவர்களிடம் வேலை வாங்க முடியாது. சில சமயங்களில் கோபப்பட்டு கையை நீட்டினால் அதுவே பெரிய சர்ச்சையாக மாறிவிடும். இதனாலேயே பாலா சினிமாவில் மிகப் பிரபலம் ஆகாத திறமையான நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார் என்றும் தெரிகிறது.
இதனிடையே தற்போது பாலா பாலா பெரிய ஹீரோக்களை வைத்து எடுத்தால் அது அவர்களின் படமாக மாறிவிடும் என்பதால், பாலா முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்க தயங்குகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
This website uses cookies.