வாழ்க்கையின் வழிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வாழை. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்கச் செய்தவர் மாரி செல்வராஜ்.
அடிதட்டு மக்களின் ஜாதிய அடிப்படையில் வெளிவந்திருந்த இந்த திரைப்படம் மேல் சாதியினரின் அடாவடித்தனத்தையும், ஆணவத்தையும் தோலுரித்துக் காட்டியது. முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் சம்பாதித்த மாரி செல்வராஜ் தொடர்ந்து அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்று பல பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கருத்தை மிகவும் ஆழமாக பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார்.
இப்படத்தில் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணங்களையும் மிக முக்கியமான நிகழ்வுகளையும் பேசும் என கூறப்படுகிறது. தேனி ஈஸ்வரர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் நிகிலா விமல் ,திவ்யா துரைசாமி, பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வருகிற 23ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி இணையதளங்கள் முழுக்க ட்ரெண்டிங்கில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாரி செல்வராஜின் வாழை படத்தின் பிரத்தியேகமான காட்சியை பார்த்து இயக்குனர் பாலா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து கண்கலங்கி அழுதுவிட்டார்.
இத்தனை சோகங்களை உள்ளே வைத்துக் கொண்டுதான் படங்களை எடுக்கிறாயா? என கண்கலங்கியபடி மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அந்த வீடியோவை தற்போது மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் இயக்குனர் பாலாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.