வாய்ப்பு கேட்ட IAS அதிகாரியை வாய்க்கு வந்தபடி கேவலமாக திட்டிய இயக்குநர் பாலா : கும்பிடு போட்டு குட்பை சொன்ன பெண்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2022, 2:03 pm

பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும்.

அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.

சேது படத்தின் மூலம் அறிமுகமான வர், பின்ன பல படங்களை இயக்கினார், பாலா ஒரு வித்தியாசமான இயக்குநர். அதிலும் நடிப்பு வரவில்லை என்றால் கெட்ட வார்த்தையில் திட்டுவது, கடும் சொற்களால் பேசுவது என ஒரு டெரரான ஆள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்து இருந்தது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்

பின் இதெல்லாம் வதந்தி என்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதனை அடுத்து கடந்த ஜூலை மாதம் படப்பிடிப்பு நடந்தது. மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இப்படி ஒரு நிலையில் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியதாக இயக்குனர் பாலா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இயக்குனர் பாலா அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுமையாக நடந்து கொள்வதும், பேசுவதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஒரு முறை பாலாவிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார்.

அப்போது பாலாவிடம் அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் என்பவர் சிறிது நேரம் காத்திருங்கள் அவர் வந்துவிடுவார் என்று சொல்லி இருக்கிறார். பின் பாலா வந்து அந்த ஐஏஎஸ் அதிகாரியை பார்த்து, “யார் இந்த ***” என்று கேட்டிருக்கிறார்.

இதனால் அவர் அதிர்ச்சியாகி இருக்கிறார். அதன் பின் பாலா, நீ ஒழுங்கா நடிக்கவில்லை என்றால் குரவளையை பிடித்து கடித்திடுவேன் என்று கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து வெளியே வந்த ஐஏஎஸ் அதிகாரி, எனக்கு நடிப்பு வேண்டாம். பென்ஷன் வாங்கிக் கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறேன் என்று ராமகிருஷ்ணனிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?