பிசாசு கருப்பா தான் இருக்குமா? பிங்க் கலர்ல கூட சட்டை போடும்… பயில்வான் கேள்விக்கு ஸ்லிப்பர் ஷாட் கொடுத்த பாலா (வீடியோ)

Author: Shree
2 August 2023, 3:34 pm

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.

உதாரணத்திற்கு பீச் ரோட்டில் வாக்கிங் செல்லும்போது நடிகை ரேகா நாயரிடம் அடி வாங்கியது, மூத்த பத்திரிகையாளர் கே. ராஜன் பயில்வானனை மேடையில் அசிங்கப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பிசாசு படத்தை குறித்து இயக்குனர் பாலாவிடம், ” நீங்க தான் படத்தின் தயாரிப்பாளர் அதனால் தான் கருப்பு ட்ரஸ்ல வந்திருக்கீங்களா? என கேட்டதற்கு, ” பிசாசுன்னா கருப்பா தான் இருக்கணுமா என்ன ? பிசாசு பிங்க் கலர் சட்டை கூட போட்டுட்டு வரலாம் என செருப்படி பதில் கொடுத்து பயில்வானனுக்கு செம செம பல்ப் கொடுத்துவிட்டார். இது பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது வைரலாகி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!