Room போட்டு ஹீரோயினை டார்ச்சர் செய்த பாலா…? சூர்யாவின் உதவியால் தப்பித்த இளம் நடிகை!

Author: Shree
11 May 2023, 8:46 am

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அண்மையில் கூட பிதாமகன் மகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் ரூ. 25 லட்சம் பணம் வாங்கிவிட்டு அவரை ஏமாற்றிவிட்டதாக கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் வணங்கான் படத்தில் நடித்த துணை நடிகைகளை சம்பளம் கொடுக்காமல் அவர்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்.

தொடர்ந்து இப்படி பல பேரை ஏமாற்றி வயிற்றில் அடிச்சு பிழைப்பு நடத்தி வரும் பாலா தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், சூர்யா அவரது இயக்கத்தில் வணங்கான் படத்தில் தயாரித்து நடித்து வந்தார். ஆனால், அவரை கொடுமை படுத்தி டார்ச்சர் செய்து… அதிகம் பணம் பிடிங்கி செலவழித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் படமே வேண்டாம் என கூறிவிட்டு சூர்யா விலகிக்கொண்டார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து சூர்யா நடிக்க இருந்த ரோலில் தற்போது அருண் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரையும் வச்சி பண்ணக்கூடாத டார்ச்சர்களையெல்லாம் செய்து கொடுமை படுத்தி வருகிறராம் பாலா. இருந்தாலும் அருண் விஜய் , பரதேசி அதர்வா, அவன் இவன் விஷால், ஆர்யா, இவர்களை போல் பேசப்படவேண்டும் என எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு நடித்து வருகிறாராம்.

அப்படத்தில் முதலில் சூர்யாவுக்கு ஜோடியாக கமிட் ஆகியிருந்த இளம் நடிகை கீர்த்தி ஷெட்டியை பாலா தன்னுடன் நெருக்கமாக இருக்க சொல்லி மிகவும் டார்ச்சர் செய்து வந்துள்ளார். படப்பிடிப்பின் போது தன் அறைக்கு அருகிலேயே கீர்த்தி ஷெட்டிக்கு ரூம் கொடுத்து அவ்வப்போது கதை சம்மந்தமாக ஆலோசனை செய்யவேண்டும் என கூறி கதவை தட்டுவராம். ஆனால், ஹீரோ சூர்யாவுக்கு பல மையில் தூரம் ரூம் போட்டுக்கொடுத்துள்ளார். அவரின் அட்டூழியத்தையெல்லாம் பார்த்து சூர்யா விலகிக்கொண்டார்.

சூர்யா விலகிய உடனே நடிகை கீர்த்தி ஷெட்டியும் விலக்கொண்டாராம். பின்னர் மீனும் மீண்டும் ஹீரோயினுக்கு மட்டும் போன் போட்டு அதிகமாக சம்பளம் தருகிறேன் நடிக்க வாங்க என கேட்டு தொந்தரவு செய்து வருகிறாராம் பாலா. எவ்வளவு கொடுத்தாலும் வேண்டவே வேண்டாம் என்று எஸ்கேப் ஆகிவிட்டராம் கீர்த்தி ஷெட்டி.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!