தமிழ் சினிமாவில் பொக்கிஷ படைப்பாளியான இயக்குனர் பாரதிராஜா கிராம வாசம் சார்ந்த பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக பார்க்கப்பட்டு வருகிறார்.
இவர் பல்வேறு நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். குறிப்பாக ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்து வைத்த பெருமை இவருக்கு சேரும். இவரிடம் உதவியாளராக பணியாற்றி படம் எடுக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்து தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்கள் பலபேர் இருக்கின்றனர்.
குறிப்பாக பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா ,சித்ரா லட்சுமணன், மனோஜ் குமார், பொன்வண்ணன், சீமான், லீனா, மணிமேகலை உள்ளிட்ட பல பேரை பாரதிராஜா தான் அறிமுகம் செய்து வைத்தார். உதவி இயக்குனர்களாக அவரிடம் பணியாற்றியவர்கள் இன்று திரைப்பட இயக்குனராக புகழ்பெற்றிருக்கிறார்கள். பல்வேறு தேசிய விருதுகளையும் பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பாரதிராஜா பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்து பேசி இருக்கும் இயக்குனர் பாரதிராஜா என்னுடைய முதல் காதல் தோல்வி அடைந்துவிட்டது. ஆனால், இப்ப கூட அவங்க வந்தா நான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று தன் முதல் காதல் குறித்து உருக்கத்துடன் பேசி இருந்தார் .
இதையும் படியுங்கள்: இவருக்கு முன்னாடி அவர் தான் எனக்கு புருஷன்…. வனிதாவை வச்சி செய்யும் வடிவேலு காமெடி!
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் 83 வயதான போதிலும் பாரதிராஜாவுக்கு தன்னுடைய முதல் காதல் மறக்க முடியாத அந்த தருணத்தை நினைவு கூர்ந்ததோடு. அந்த காதல் தோற்றதால் தான் நீங்கள் மிகப்பெரிய இயக்குனராக வர முடிந்தது. காதலில் ஜெயித்திருந்தால் அது ஒரு நல்ல வாழ்க்கை ஆக இருந்திருக்கும். ஆனால் இப்போது இருக்கும் இந்த நிலை இருக்குமா? என்பது சந்தேகம் தான் என கூறி வருகிறார்கள். முன்னதாக பாரதிராஜா அவருக்கு மூன்று திருமணம் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.