ஒரே ஒரு படம் தான்.. 100 -கோடி வசூல் BMW கார் வாங்கியுள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர் ..!

Author: Vignesh
20 April 2024, 6:15 pm

2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் டான் திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவில் டான் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

மேலும் படிக்க: பல பேருடன் தொடர்பு.. அதிக பண தேவை இருந்துச்சு; எமோஷனலாக பேசிய ரேஷ்மா பசுப்புலேட்டி..!

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி, தனுஷ் படங்களை இயக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்கவும், அதற்கான ஆரம்பகட்ட பணிகளை விரைவில் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

cibi-chakravarthy

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது பெற்றோருக்கு புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்து இருந்தார் சி பி சக்கரவர்த்தி. அப்போது எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அவர் தனக்காக ஒரு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை வாங்கி உள்ளார்.

மேலும் படிக்க: ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டையால் நொந்து போன விஜய் ஆண்டனியின் பதிவு..!

அந்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 460

    0

    0