‘குணா’ படம் என்னுடைய படம்…கோவையில் மலையாள இயக்குனர் பர பர பேட்டி.!
Author: Selvan18 March 2025, 7:33 pm
குணா திரைப்படம் குறித்து சிபி மலையில் விளக்கம்
பிரபல மலையில் இயக்குநர் சிபி மலயாழ்,குணா படத்தை முதலில் தான் இயக்கவிருந்ததாக தெரிவித்துள்ளார்.கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,தமிழ் மற்றும் மலையாள திரையுலக இணைப்புகள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
இதையும் படியுங்க: அதிருதா சும்மா அதிரனும் மாமே…’குட் பேட் அக்லி’ லிரிக் வீடியோ ரிலீஸ்.!
தமிழ்நாடு-கேரள எல்லையான கோவை சாவடி பகுதியில் விரைவில் மீடியா மற்றும் சினிமா தொடர்பான பயிற்சி மையம் தொடங்க உள்ளது.இதற்கான தொடக்க விழா ஹார்மனி கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக சிபி மலையில் கலந்து கொண்டார்.
அவர் செய்தியாளர்களுடன் பேசும் போது “கேரள – தமிழக எல்லையில் இவ்விதமான பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படுவது,இரண்டு மொழி திரையுலகங்களுக்கும் பெரும் சாதகமாக அமையும்.மலையாளம் மற்றும் தமிழ் சினிமா துறைகள் இணைந்து பணியாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்,”என்று கூறினார்.
மேலும்,”தமிழ் சினிமாவிற்கும்,எனக்கும் நீண்ட கால தொடர்பு உள்ளது,கமல் நடிப்பில் வெளியான ‘குணா’ திரைப்படத்தை முதலில் நான் இயக்கவிருந்தேன்.ஆனால்,சில காரணங்களால் அது சஞ்சய் பாரதிக்கு சென்றது. இன்று, தமிழ் திரையுலகத்தில் இளம் இயக்குநர்கள் குவிந்து, தரமான திரைப்படங்களை வழங்கி வருகின்றனர்.
பார்வையாளர்களும் குடும்பப் பின்னணியிலான படங்களை தாண்டி,புதிய கதைக்களங்களை கொண்ட படங்களை விரும்புகிறார்கள்.இந்திய அளவில் தென்னிந்திய திரைப்படங்கள் சிறப்பாக வரவேற்கப்படுகின்றன” என்று கூறினார்.
மேலும்”நான் மம்முட்டியை வைத்து விரைவில் ஒரு திரைப்படம் இயக்க உள்ளேன், அதற்கான சரியான கதைக்களம் அமைய வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.