தாயின் அழுகையை மறந்த அமரன்.. கோபி நயினார் விமர்சனம்!

Author: Hariharasudhan
8 November 2024, 5:05 pm

அமரன் திரைப்படம் லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு சிறப்பாக இருந்ததாக இயக்குனர் கோபி நயினார் கூறியுள்ளார்.

சென்னை: கடந்த தீபாவளி தினத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி நடைபோட்டு வரும் திரைப்படம் அமரன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்கியிருந்தார்.

படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்து வருகிறது. இதுவரை உலகெங்கும் 100 கோடியைக் கடந்து வசூல் செய்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், மிக விரைவில் 200 கோடி ரூபாய் கிளப்பில் அமரன் திரைப்படம் இணையும் எனவும் சினிமா வணிகர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட பயோபிக் திரைப்படமாக வெளியான அமரன், எந்த அளவு நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறதோ, அதே அளவு எதிர் வினையையும் கடந்து வருகிறது. அந்த வகையில், இயக்குனர் கோபி நயனார் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “சமீபத்தில் நான் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படத்தை பார்த்தேன். அனைவரும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டியும், அதனால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாகவும் எனக்கு புரிய வருகிறது. அதனால் இந்த படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது.

ஆனால் இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்தை பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. இப்படத்தின் திரைக்கதைக்கு பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

ஒருவன் ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனைக் கண்ட தாய் துடிதுடிக்கிறாள். இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக சுடுகிறார், அது குழந்தை என்பதால் இரண்டு மூன்று குண்டுகளால் துளைக்கப்பட்டு துடித்து சாகக்கூடாது என ஒரே குண்டால் அதன் இதயத்தை நோக்கி பிரமாதமாக சுட்டு ஒரே நொடியில் அருமையாக கொல்கிறார் என சிலாகித்து பேசுகின்றனர்.

Amaran sk

ஆனால் அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அந்தக் குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும் அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்த திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது. நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தனுஷை மீண்டும் இழுத்த சிவகார்த்திகேயன்.. திடீரென மாறிய முகம்!

முன்னதாக, இயக்குனர் வசந்தபாலன், ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆகியோர் எதிர்ப்பு கருத்துகளை பதிவு செய்தனர். முக்கியமாக, எஸ்டிபிஐ கட்சி இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து உள்ளதாக கடும் கண்டனம் தெரிவித்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கமலின் தயாரிப்பு நிறுவன அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

அதேநேரம், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, நாம் அனைவரும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அமரன் படத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 225

    0

    0