உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!
Author: Selvan1 March 2025, 1:53 pm
ரசிகர்கள் செய்வது மிக தவறு
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று,துணிவு போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்க: தரமான சம்பவம்…விஜய் ரெக்கார்டை தூக்கி வீசிய ‘குட் பேட் அக்லி’.!
இவர் தற்போது விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார்,முழுவதும் அரசியல் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது,இவர் அஜித்தை வைத்து ஏற்கனவே மூன்று வெற்றிப்படங்களை கொடுத்துள்ளதால்,விஜயின் ஜனநாயகன் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்,அதாவது சமீப காலமாக ரசிகர்கள் பலர் தாங்கள் பார்க்கும் படங்கள் குறித்து அதிகளவில் சோசியல் மீடியாவில் விமர்சனம் செய்து வருகின்றனர்,பல படங்கள் தோல்வி அடைய காரணமே இந்த மோசமான விமர்சனங்கள் தான்,சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, அந்த மூணு மணி நேரம் தான் நீங்க சினிமாவுக்குள்ள இருக்கனும்,மத்த நேரத்துல நீங்க சினிமா பற்றி நினைக்க வேண்டிய அவசியம் இல்லை,அது உங்களுடைய வேலையும் இல்லை,அது வேற ஒருத்தங்களுடைய வேலை,ஒரு ரசிகன் ஒரு திரைப்படத்திற்கு மூணு மணி நேரம் செலவழித்தால் மட்டும் போதும் என நான் நினைக்கிறன் என சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பார்.