இயக்குனர் ஹரியின் வீட்டில் ஏற்பட்ட பெரிய இழப்பு.. உருகுலைந்துப்போன குடும்பம்..!
Author: Vignesh21 October 2023, 12:40 pm
ஹரி தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது அதிரடி-மசாலா படங்களின் காரணமாக இவர் பரவலாக அறியப்படுகிறார். இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை தந்தவர். இவர் படம் எப்போ தொடங்குகிறது எப்போ முடிகிறதுக்கே என்பதே தெரியாது அந்த அளவிற்கு வேகமாக கதை நகழும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஹரி படங்கள் என்றாலே ஆக்ஷனுக்கு கேட்கவா வேண்டும் பிரித்து எடுத்திருப்பார்.
இவர் இயக்கிய சாமி, கோவில், அருள், சிங்கம் என பல படங்கள் வெற்றியை கண்டு உள்ளது. கடைசியாக இவரது இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க யானை திரைப்படம் வெளியாகி இருந்தது.
அடுத்து ஹரி விஷாலை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஹரியின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். அவரது உடல் இரண்டு மணி வரை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் வீட்டில் வைக்கப்பட்டு, பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களுடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதிச் சடங்குகள் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.