தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகராக இருந்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தனது தந்தை டி.ராஜேந்தர் நான்கு வயதில் “என் தங்கை கல்யாணி” படம் மூலம் சிம்புவை கைக்குழந்தையாக அறிமுகம் செய்துவைத்தார்.
குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து சிறுவயதிலே சிம்பு புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பதினெட்டு வயதில் “காதல் அழிவதில்லை” படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தம், குத்து, கோவில், மன்மதன், வல்லவன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பத்து தல இப்படம் பெரிதாக ஓடவில்லை. வெற்றிமாறனின் விடுதலை இப்படத்தை தூக்கி சாப்பிட்டுவிட்டது.
அதையடுத்து தற்போது கமல் ஹாசனின் தயாரிப்பில் தனது 48வது படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது. சிம்பு தற்போது லண்டலின் STR 48 படத்திற்காக பயிற்சி பெற்று வருகிறார். அந்த ஒரு மாத பயிற்சி முடிந்து சிம்பு திரும்பிய பிறகு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தான் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு மிகவும் தாமதமாக வருவார், பல நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பதாக பல சர்ச்சைகள் சிக்கியுள்ளார். இவர் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2004 -ம் ஆண்டு வெளியான படம் தான் கோவில். இதில் இப்படத்தில் ஹீரோயினாக சோனியா அகர்வால் நடித்திருப்பார்.
இப்படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு தாமதமாக தான் வருவாராம். இதனால் கோபம் அடைந்த இயக்குனர் ஹரி “எங்கடா அந்த மடப்பய” என தன் உதவி இயக்குனரை அழைத்து இருக்கிறார். அப்போது அங்கு வந்த உதவி இயக்குனரை ஹரி திட்டி தீர்த்துள்ளார். பக்கத்தில் இருந்த சிம்பு தன்னை தான் மறைமுகமா திட்டுகிறார் என்று புரிந்து கொண்டு அன்று முதல் ஷூட்டிங்கிற்கு நேரத்தில் வந்தார் என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.