தமிழ் சினிமாவில் கேப்டனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரெச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.
பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், இயற்கை, ஈ, பேரான்மை போன்ற படங்களை இயக்கிய மறைந்த பிரபல இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் விஜயகாந்துடன் பணிபுரிந்த அனுபவத்தை ஒரு பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார். இவர் விஜயகாந்த் நடித்த அலெக்சாண்டர் என்ற படத்தில் பணிபுரிந்திருக்கிறார். அப்போது ஒரு சிஜி வேலை மட்டும் விட்டு வைத்திருந்ததை எடுத்து விடலாம் என கேமிராக்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்க, விஜயகாந்த் அவர்கள் மேக்கப் போட்டு முடித்து தன் உதவியாளரை ஷார்ட் ரெடியா என்று கேட்க சொல்லியிருக்கிறார்.
எந்த நடிகரும் செய்யாததை விஜயகாந்த் செய்தார் என்று ஜனநாதன் கூறியுள்ளார். அதாவது சினிமாவில் பொதுவாக எல்லா நடிகரையும் நாங்கள் தான் ஷார்ட் ரெடி என்று சொல்லி அழைத்து வருவோம். ஆனால் விஜயகாந்த் அவருடைய வேலை முடிந்தால் ஷார்ட் ரெடியா என்று சில சமயங்களில் அவரே வந்து விடுவார்.
மேலும் ஒரு பெரிய விஐபி யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கும் போது ஷார்ட் ரெடி என்று சொன்னால், கொஞ்சம் கூட படக்குழுவை காத்திருக்க வைக்காமல் வந்த விஐபியை காக்க வைத்து விட்டு நடிக்க வருவார். இப்போதிருக்கும் எத்தனை நடிகர்கள் அப்படி செய்வார்கள் என்று சொல்லமுடியாது. படக்குழுவை எப்போதும் விஜயகாந்த் வீணாக காக்க வைத்ததே இல்லை என்று அந்த இயக்குனர் பேட்டியில் கூறியுள்ளார்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.