‘எல்லாரும் பைத்தியமாகிட்டாங்க’.. உதயநிதி மனைவி எக்ஸ் தளத்தில் போட்ட ஆவேசப்பதிவு..!
Author: Vignesh11 March 2024, 6:13 pm
வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் ஆக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி. இந்நிலையில், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், சமூக வலைதளங்களில் மனிதர்களின் நடவடிக்கைகளை பார்த்து வியப்படைவதாகவும், அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சிலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், சில அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் மாங்கை என்ற திரைப்படம் எடுத்தது தெரியவந்துள்ளது.
இந்த படத்தில் பாடல் ஒன்றை கிருத்திகா உதயநிதி வெளியிட்டிருந்த நிலையில், கிருத்திகாவை போதை பொருள் கடத்தல் தொடர்பான விஷயங்களில் தொடர்புடைய சிலர் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதற்காக கிருத்திகா உதயநிதி அந்த பதிவை வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
I'm fascinated by human behaviour on social media. Everyone has gone a bit mad 🙂
— kiruthiga udhayanidh (@astrokiru) March 10, 2024