சிம்பு நடிப்பில் வெளிவந்த வானம் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக பிரபலமானவர் தான் இயக்குனர் கிரிஷ். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக பார்க்கப்பட்டு வருகிறார் .
இவர் ரம்யா என்ற பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கை இரண்டு வருடத்திலேயே விவாகரத்தில் சென்று முடிந்து விட்டது.
அதை எடுத்து திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருந்து வந்த இயக்குனர் கிரிஷ் தற்போது திடீரென ரகசியமாக பிரீத்தி செல்லா என்ற மருத்துவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த திருமணம் நடைபெற்றது . இந்த திருமணம் ஹைதராபாத்தில் எளிமையாக முடிந்த நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
க்ரிஷ் திருமணம் செய்துள்ள புதிய மனைவியான ப்ரீத்தி செல்லா பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே மிகவும் அழகாக இருக்கிறார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் இவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் இந்த தம்பதியரின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் 46 வயதில் இப்படி ஒரு பெண் உங்களுக்கு கிடைச்சிருக்கா ” பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்” என்றெல்லாம் விமர்சித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.