சமந்தா TO சம்யுக்தா.. இளம் நடிகைகளை வலையில் வீழ்த்தும் டாப் இயக்குனரின் லீலைகள்!!!
Author: Vignesh24 May 2023, 11:08 am
இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்து வருபவர். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், ஆல வைகுண்டபுரமுலு படத்திற்கு சூப்பர் ஹிட் கொடுத்ததையடுத்து, பின்னர் தற்போது மகேஷ்பாபுவின் 28வது படத்தினையும் இயக்கி உள்ளார். இதனிடையே, திரிவிக்ரம் நடிகைகளுடன் காட்டிய நெருக்கம் மற்றும் லீலைகளை பற்றி பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் பேசியுள்ளார்.

டாப் இயக்குனராக தெலுங்கு சினிமாவில் திகழ்ந்து வரும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவரது வலையில் சிக்கிய நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா என்பது அவரது ரசிகர்களுக்கு பேரதிச்சியாக உள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு ஏற்ப ஒரு நடிகையை நெருக்கமாக்கி கொண்டு படவாய்ப்பை கொடுப்பதும், பின்னர் சமந்தாவுக்கு அடுத்து நடிகை அனு இம்மானுவேலை நெருக்கமாக்கி உள்ளார்.

அதனையடுத்து, நடிகை பார்வதி மில்டனுடன் நெருக்கம் காட்டி வைர நெக்லஸ் பரிசாக வழங்கியிருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தற்போது இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உடன் நெருக்கமாக இருக்கும் நடிகை என்றால் வாத்தி பட ஹீரோயின் சம்யுக்தா தானாம். ஒரு மேடையில் ஐ லவ் யூ சம்யுக்தா என்று கூறியும், மற்றொரு நாள் நாம் நிறைய பேச வேண்டியிருக்கிறது என்று கூறியதும் அந்த சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, ஒரு இளம் நடிகை அந்த இயக்குனரால் தற்கொலை வரை சென்று காப்பாற்றப்பட்டார். அந்த நடிகை தான் பூனம் கவுர். இவர் தமிழில் ஒருசில படங்களில் நடித்துள்ளார். பவன் கல்யாணை பூனம் கவுர் காதலித்து வந்த போதும், தன்னுடைய கட்டுப்பாட்டில் பூனம் கவுரை ஒரு படத்தில் கமிட் செய்திருக்கிறார்.
இதனிடையே, பவன் கல்யாணை காதலிப்பதை தெரிந்தப்பின் பூனம் கவுரை நீக்கிவிட்டு வேறொரு நடிகையை கமிட் செய்து இருக்கிறார். இதுகுறித்து பூனம் கவுர் சமுகவலைத்தளத்தில் தன் காதலை பிரித்தும் தன் தற்கொலை முயற்சிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் அந்த இயக்குனர் தான் காரணம் என்று மறைமுகமாகவும் கூறியிருக்கிறார்.