மாரி செல்வராஜோட இன்னொரு முகத்தை பார்த்து பயந்துட்டேன் : பரியேறும் பெருமாள் சூட்டிங்கில் நடந்த கொடூர காட்சி!!
Author: Vignesh1 டிசம்பர் 2022, 4:00 மணி
இயக்குனர் மாரி செய்வராஜ் பற்றி நடிகர் ஜி.மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்க்கு முன்னர் மாரி செய்வராஜ் இயக்குனர் ராமினுடைய துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். அதன் பின்பு கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “கர்ணன்” திரைப்படத்தை இயக்கினார். இப்படமானது நல்ல வெற்றியை படக்குழுவிற்கு தந்தது. இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார் மேலும் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் பிரொடெக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. உதயநிதி நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் எடுக்கும் அடுத்தப்படத்தில் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 2018ல் வெளிவந்த “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். இப்படத்தின் கதிர், ஆனந்தி, யோகி பாபு, விஜேஷ், ஜி மாரிமுத்து, கராத்தே வெங்கடேசன், சண்முக ராஜன், பூ ராம் ஏன பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முதல் தலைமுறையாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறும் இளைஞன் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படமானது உருவாக்கப்பட்டது.
மேலும் இப்படமானது சிறந்த படத்திற்கான விருதுகளையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடித்திருந்த ஜி.மாரிமுத்து பிரபல பத்திரிக்கை நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டியில் “பரியேறும் பெருமாள்” படத்தில் கதாநாயகனான கதிரை அழைத்து அடித்து அவமானப்படும் ஒரு காட்சிக்கு எப்படி மனரீதியாக தயாராகியிருந்தீர்கள் என்று செய்தியாளர் நடிகர் ஜி.மாரிமுத்துவை கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த அவர் “அந்த காட்சியை எடுக்கும் போது மட்டும் இயக்குனர் ஒரு மிருகம் போல இருந்தார். தூத்துக்குடிக்கு திருநெல்வேலிக்கு இடையில் கருங்குளம் என்று ஊரில் தான் அந்த காட்சியானது எடுக்கப்பட்டது. இக்கட்சியானது விடிய விடிய எடுக்கப்பட்டது. இந்த காட்சியில் கதிர் தன்னுடைய காதலி வீட்டில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள பக்கத்துவீட்டாரிடம் சட்டையை வாங்கி போட்டுகொண்டு ஒரு பரிசுசூடன் வருவார். ஆனால் காதலி வீட்டில் இருப்பவர்கள் இவரை அடித்து அவமானப்படுத்தி முகத்தில் சிறுநீர் கழுத்து அசிங்கப்படுத்துவது தான் அந்த காட்சி என்று எங்களிடம் முதலிலேயே கூறிவிட்டார் இயக்குனர்.
ஆனால் அந்த காட்சி எடுக்கும் போது அனைவரையுமே இயக்குனர் மாரி செல்வராஜ் திட்டி கொண்டு கோவமாகவே இருந்தார். நானும் அவரிடம் சென்று என்ன? சார் என்ன ஆச்சு? ஒரே கோவமாகவே இருக்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. அவர் கூறியதாவது `இல்லை சார் இந்த காட்சி என்னுடைய உண்மையான வாழ்கையிலேயே நடந்திருக்கிறது என்று கூறினார். அப்போது நான் புரிந்து கொண்டேன் இவரும் இப்படத்தில் வரும் கதிரை போல காதலி வீட்டிற்கு சென்று அவமானப்படுத்தப்பட்டுள்ளார் என்று. எனவே நானும் இந்த காட்சியில் நன்றாக நடிக்க வேண்டும் என்று நடித்திருந்தேன் என்று பல சுவாரசியமான நிகழ்விகளை அதே பேட்டியில் பகிர்ந்து கொண்டார் நடிகர் ஜி. மாரிமுத்து.
0
0