அஜித்தின் அந்த கெட்ட பழக்கத்தை ஷாலினியால் கூட மாத்த முடியாது.. அடித்து சொல்லும் பிரபலம்..!

Author: Vignesh
12 ஏப்ரல் 2023, 11:30 காலை
ajith shalini - updatendews360
Quick Share

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர். நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அளவுகடந்த வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அந்த படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வருகிறது.

ajith shalini - updatendews360

இதனிடையே, நடிகர் அஜித்தின் ஒரு கெட்ட பழக்கம் குறித்து எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் கலக்கி வரும் மாரிமுத்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது மாரிமுத்து பேசியதாவது, தான் அஜித் நடித்த ஆசை, வாலி போன்ற படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்ததாகவும், அப்ப பார்த்த அஜித்துக்கும் இப்ப பார்க்குற அஜித்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், அப்படியே இருக்கிறார் எனவும், இன்னும் ஒருவருக்கு உதவி செய்யணும் என்ற மனசு மாறவே இல்லை என தெரிவித்துள்ளார்.

marimuthu - updatenews360

மேலும் நடிகர் அஜித் 25000 சம்பளம் வங்குன போதும் சரி, இப்ப 100 கோடி வாங்கும் போது சரி பணத்தை என்ன செய்வது, எப்படி ஒழித்து வைப்பது என்ற எண்ணம் அவருக்கு கிடையவே கிடையாது என்றும், ஆனால் அவரிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருப்பதாகவும், அதை அவரின் மனைவி ஷாலினியால் கூட மாற்ற முடியவில்லை என்றும், அதாங்க, தனக்கென எதுவும் சேர்த்து வைக்காத குணம் அது என்று தெரிவித்துள்ளார். தற்போது வரை நடிகர் அஜித் மாற்றிக் கொள்ளவில்லை என்று மாரிமுத்து கூறியுள்ளார்.

  • DMDK நாள் குறித்த அதிமுக – தேமுதிக – தவெக.. மாறப் போகிறதா தமிழக அரசியல் களம்?
  • Views: - 664

    2

    0