நடிகைகளை காதலியாக பாருங்கள்… திரிஷா பிரச்சனையில் மூக்கை நுழைத்த மிஷ்கின்!
Author: Rajesh25 February 2024, 10:23 am
தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளினியான இயக்குனர் மிஷ்கின் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கி நல்ல அடையாளத்தை பெற்றார். 2006 ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தடம் பதித்தார். முதல் படத்திலேயே மிப்பெரிய அளவில் பெயரையும் புகழையும் சம்பாதித்தார்.
அதை தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனிடையே சிலதிரைப்படங்களில் அழுத்தமான ரோல்களில் நடித்தும் வருகிறார்.
இதனிடையே அவ்வப்போது ஏதேனும் மேடைகளில் பேசும் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி விமர்சனத்திற்கு உள்ளாவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் தற்போது திரிஷா விவகாரத்தை குறித்து பேசியுள்ள மிஷ்கின், “பெண்களை அவமதிப்பவன் ஆண் மகனே அல்ல. ஒரு நடிகை குறித்து சுலபமாக வாய்க்கு வந்ததை பேசிவிடாதீர்கள். நான் இரண்டு முறைதான் திரிஷாவை நேரில் சந்தித்திருக்கிறேன். அவர் மிகவும் எளிமையான பெண். நடிகைகளை உங்களின் காதலியாகக்கூட நினைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால் அசிங்கமாக, ஆபாசமாக பார்க்கவேண்டாம். எதிலும் ஒரு கண்ணியம் வேண்டும்” என கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் நீங்கள் என்ன சந்தோஷம் அடைந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, ” நான் பாவனா உடன் இருந்த அந்தரங்க உறவு தான் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது என மிஷ்கின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதனை நினைவூட்டி நீங்க எவ்வளவு மோசமான வக்கிரம் பிடித்த ஆள் என்பது ஊருக்கே தெரியும். இப்போ நீங்க வந்து திரிஷா விவகாரத்திற்கு உபதேசம் செய்வதை நினைத்தால் சிரிப்பா வருது என விமர்சித்துள்ளனர்.