சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார். பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 48 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார். அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் நடித்து வரும் கஸ்தூரி அரசியல் குறித்தும், சமூக அவலங்களை குறித்து ஏதேனும் சர்ச்சையாக பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். குறிப்பாக ட்விட்டரில் ஏடாகூடமாக எதையேனும் பதிவிட்டு விமர்சனத்திற்கு ஆளாகுவார். இதனாலே இருக்கு ட்விட்டர் கஸ்தூரி என கிண்டல் பெயர் வைத்தனர் நெட்டிசன்ஸ்.
அந்தவகையில் தற்போது, டாஸ்மாக் ஒன்றில் இரண்டு இளம் பெண்கள் மது வாங்கும் வாட்ஸ் ஆப் ஷேர் வீடியோவை வெளியிட்டு, தண்ணியடி, பெண்ணே தண்ணியடி ! எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று தண்ணியடி… சூப்பர்…அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும் என நக்கல் நடித்திருந்தார்.
கஸ்தூரியின் இந்த பதிவிற்கு பதிலளித்த மூடர் கூடம் இயக்குனர் நவீன், “பணக்கார மேல்தட்டு பெண்கள் மது அருந்துவதை நீங்கள் பார்த்ததே இல்லையா? அப்போதெல்லாம் கெடாத நீங்கள் சாமான்ய பெண்கள் சரக்கடிக்கும்போதுதான் கெடுமா? மது மனிதனின் உடல்நலத்திற்கு கேடு. ஆதிக்க உணர்வு சமூகத்திற்கே கேடு. பெண்ணாக இருந்துகொண்டு திராவிடியா என்று சொல்வதை நிறுத்துங்கள் என்று கொந்தளித்து ரிப்ளை செய்துள்ளார். இதனால் கஸ்தூரியை பலர் விளாசித்தள்ளியுள்ளனர்.
இதே போல் மேலும் ஒரு பெண், ” கஸ்தூரி பாரில் நின்றுக்கொண்டிருக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டு, உங்களைப் போல பாரில் தண்ணியடி செய்வது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மது அருந்துபவர்களை நான் இங்கு ஆதரிக்கவில்லை என்றாலும்! உங்களிடமிருந்து இதுபோன்ற ட்வீட்டைப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. அவர்களின் விருப்பம், அவர்களின் பணம், அவர்களின் கல்லீரல்! உங்களுக்கு என்ன தொந்தரவு? சவுக்கடி கேள்வி கேட்டுள்ளார். இப்படிதான் எதையாவது கருத்து பேசுறேன்னு பதிவிட்டு வாங்கிக்கட்டிக்கொள்வதையே கஸ்தூரி வேலையாக வைத்திருக்கிறார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
சுமாரான வரவேற்பு ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான…
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…
This website uses cookies.