அவனுக்கு நிறையவே பிரச்சினை; பதில் சொல்ல ஆல்பம் பண்ணிட்டான்; இயக்குனர் பா.ரஞ்சித்

Author: Sudha
19 July 2024, 2:19 pm

கடந்த 2020 ஆம் ஆண்டு சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு, தீ இருவரது உருவாக்கத்தில் உருவான என்ஜாய் எஞ்சாமி பாடல் உலகமெங்கும் ட்ரெண்டாகி பிரபலமானது.ஆங்கில இதழ் ஒன்றில் இடம்பெற்ற இப்பாடல் பற்றிய கட்டுரையில் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ-யின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டு, அறிவின் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் பாடலாசிரியர் அறிவு வருத்தப்பட, பலரும் அறிவுக்கு உரிய ‘கிரெடிட்ஸ்’ கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். அப்போது இயக்குநர் பா.இரஞ்சித் அறிவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துப் பேசியிருந்தார்.

2022ம் ஆண்டு சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டின் கலை நிகழ்ச்சியில் `என்ஜாயி எஞ்சாமி’ பாடப்பட்டபோது அறிவு அதில் பங்கேற்கவில்லை. எனக்கு அழைப்பே வரவில்லை என்று அறிவும், அழைப்பு விடுத்தோம், வரவில்லை’ என்று சந்தோஷ் நாராயணனும் மாறி மாறி விளக்கமளித்தனர்.

இந்நிலையில் அறிவின் ‘வள்ளியம்மா பேராண்டி’ எனும் சுயாதீன ஆல்பத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய பா ரஞ்சித் என்ஜாயி எஞ்சாமி’ பாடலால் அறிவுக்கு நிறையப் பிரச்னைகள் வந்தன. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டான். மென்மையான மனம் உள்ளவன், எளிதில் உடைந்துவிடுவான். அதனால், அதிலிருந்து வெளியே வர பெரும் மனப் போராட்டாத்தை எதிர்கொண்டான். அவனது அந்தப் போராட்டத்திற்கான பதில்தான் இந்த ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பத்தில் இருக்கும் 12 பாடல்களும் என்று பேசினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!