“உனக்கு என்ன தகுதி இருக்கு.. விமர்சனம் என்பது நாகரிகமாக இருக்க வேண்டும்”.. ப்ளூ சட்டை மாறனை தாக்கி பேசிய பிரபல இயக்குனர்..!

Author: Vignesh
4 October 2022, 7:45 pm

தமிழ் படங்களை கடுமையாக விமர்சித்து அதன் மூலம் பிரபலமானவர் தான் ப்ளூ சட்டை மாறன. .பல ஆண்டுகளாக படங்களை விமர்சனம் செய்து வரும் மாறன் பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றார். மேலும் அவரின் விமர்சனங்களால் பல திரைபிரபலங்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

மேலும் சிலர் நேரடியாகவே மாறனை தாக்கி பேசி வந்தனர். ஆனால் அதற்கெல்லாம் அவர் அசருவதாக தெரியவில்லை. இந்நிலையில் விமர்சனம் என்ற பெயரில் மாறன் பேசும் சொற்கள் தான் அடுத்தவர்களை காயப்படுத்துவதாக இருக்கின்றது என பலரது கருத்தாக உள்ளது.

நாகரிகமற்ற பேச்சு, உருவ கேலி என மாறன் செய்வது கடுமையான கண்டனத்திற்கு உள்ளது. மேலும் சமீபத்தில் கூட இயக்குனர் கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தால் கொந்தளித்து பேசினார். அதற்கு மாறன் ட்விட்டரில் பதிலளித்தார்.

Gvm Vs Blue - Updatenews360

இந்நிலையில் தற்போது எந்த ஒரு பிரபலம் தன்னை பற்றி பேசினாலும் அதற்கு பதிலளித்து பிரச்சனைகளை பெரிதாக்கி வருகின்றார் மாறன். சமீபத்தில் இந்திய சினிமாவே பாராட்டும் படமாக அமைந்த பொன்னியின் செல்வன் படத்தை விமர்சனம் செய்தார் மாறன்.

ஆரம்பத்தில் படம் நன்றாக இருப்பது போல் பேசிவிட்டு போக போக அவரது வேலையை காட்டிவிட்டார் மாறன். இவரின் விமர்சனம் ஒட்டுமொத்த திரையுலகையும், ரசிகர்களையும் கோபத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இயக்குனர் பேரரசு ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்தார்.

perarasu - updatenews360

அவர் கூறுகையில், படங்களை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு. அவரை anti indian படத்தின் 2, 3 பாகங்களை எடுக்க சொல்லுங்க. ஒரு படத்தை எடுத்து வெற்றி பெற முடியவில்லை. இவர் மற்ற படங்களை விமர்சனம் செய்கின்றார்.

விமர்சனம் என்பது நாகரிகமாக இருக்க வேண்டும். நாங்கள் செய்யும் தவறை நாகரிகமாக சுட்டிக்காட்டுங்கள். அடுத்த முறை அந்த தவறை சரிசெய்ய கண்டிப்பாக முயற்சிப்போம் என்று பேரரசு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 525

    0

    0