மாரி செல்வராஜ் மீது மரியாதை கூடுகிறது… இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பெருமிதம்!

Author:
27 August 2024, 5:58 pm

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது வெளிவந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் “வாழை”.

இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை பார்த்த எல்லோருமே கண் கலங்கி மன வேதனைடன் வெளியில் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

திரையரங்கில் இருந்து வெளியில் வரும் எல்லோருமே கனத்த இதயத்தோடு வந்து பேட்டி கொடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் முன்னதாக இப்படத்தை பார்த்த இயக்குனர் பாலா தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் கலங்கி அழுது மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

இந்நிலையில் வாழை படம் பார்த்த பிரபல இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், “வாழை படம் பார்க்க பார்க்க மாரி செல்வராஜ் மீது மரியாதை கூடியது. இந்தக் கதை அவரது வாழ்க்கையில் நடந்தது என்பதை பார்க்கும்போது அவர் எந்த இடத்தில இருந்து எங்கே வந்திருக்கிறார் என்பதை நினைத்து பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது.

அங்கிருந்து இங்கு வந்து சினிமாவை கற்றுக்கொண்டு படம் எடுத்து அவருக்கு நடந்ததை சொல்லிக்கொண்டிருப்பதை பார்த்து வியப்பாக இருக்கிறது. படக்குழுவினருக்கும், மாரி செல்வராஜுக்கும் வாழ்த்துகள்” என கூறி பாராட்டியிருக்கிறார். வாழை திரைப்படம் கடந்த 4 நாட்களில் உலகளவில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருவது குறிப்பிடதக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 202

    0

    0