அதுப்பில் ஆடுகிறார் விஜய்… இந்த ஆணவத்தை உங்க அப்பாவிடம் காட்டுங்க – மோசமாக விமர்சித்த ராஜகுமாரன்!

Author: Shree
28 June 2023, 10:46 am

கடந்த சில வருடங்களாகவே விஜய் ரூ. 120 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். என்ன தான் விஜய் ஸ்டார் நடிகராக அந்தஸ்திற்கு உயர்ந்தாலும் அவர் தனது பெற்றோர்களை மதிக்காமல் வயதான காலத்தில் அவர்களை கைவிட்டுவிட்டார் என்பதை பலர் விமர்சித்து வருகிறார். பலகோடி ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் விஜய் இப்படி நடந்துக்கொள்ளலாமா? என பலர் கேட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் விஜய்யின் வளர்ச்சிக்கு பாதை போட்டவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகர். பல முன்னணி இயக்குனர்களின் வீட்டு வாசலில் தன் மகனுக்கு நல்ல படவாய்ப்பு கொடுங்கள் என காத்து கிடந்திருக்கிறார். தன் வளர்ச்சிக்கு பெரும் தூணாக இருந்த விஜய் பின்னாளில் அவரை மதிக்காதது நல்லது அல்ல என ரசிகர்களே கூறுகிறார்கள்.

அப்படித்தானே தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து கோபமாக பேசியுள்ளார். அதாவது விஜய் நடித்த வாரிசு படத்தில் சரத்குமார் உடைய நடிப்பு தான் சிறப்பாக இருந்தது. அவரைத் தவிர வேறு எந்த நடிகருமே சரியாக நடிக்கவில்லை. குறிப்பாக, விஜய் தப்பு தப்பாக நடித்துள்ளார்.

ஒரு தந்தையின் முன் ஒரு மகன் இப்படித்தான் ஆணவமாக, திமிராக பேசுவதா? இதை விஜய் தன்னுடைய தந்தையிடம் செய்யலாம் திரையில் செய்யக்கூடாது. காரணம், இவர் செய்வதை பார்த்து அவருடைய ரசிகர்கள் அப்படியே தங்களுடைய தந்தையின் முன் பேசுவார்கள். இது ரொம்ப ரொம்ப தவறான செயல் என்று ராஜகுமாரன் கோபமாக பேசி இருக்கிறார். நெட்டிசன்ஸ் பலர் ராஜ்குமார் கூறுவது மிகவும் சரி தான். அவர் அப்பாவிடம் இருக்கும் கோபத்தை திரையில் வந்து காட்டினாள் அவரை பார்த்து நாலு கெட்டு தான் போவார்கள் என கூறி வருகின்றனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!