அஜித் அப்போவே அப்படி..! அவர மாதிரி முடியாது.. ராஜமௌலி கூறிய தகவல்..!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2022, 4:45 pm

எஸ் எஸ் ராஜமௌலி என்றால் பிரம்மாண்ட இயக்குனர் வரலாற்று காவியங்களை பக்குவமாக திரை கதையில் அமைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்று நாம் சொல்லலாம்.

இதற்கு உதாரணமாக இவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் 2 படங்கள் மட்டுமல்லாமல் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தையும் கூறலாம். தற்போது RRR திரைப்படம் ஆஸ்கார் அவார்டுக்கு இணையான கோல்டன் குளோப் அவார்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் இரண்டு பரிசுகளை பெறுவது உறுதி என்று தெரிகிறது.

Ajithkumar_updatenews360

மேலும் வெற்றி படங்களை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் இவரது தனி பாணியை பார்த்து இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் ஏராளமான அளவு இந்தியா முழுவதுமே உள்ளது.இவர் தமிழ் நடிகரான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் இருக்கக்கூடிய தல அஜித் பற்றி சில அற்புதமான கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார். பொதுவாகவே திரை உலகில் இருப்பவர்களுக்கு இளமையை எப்போதும் பொத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இளமை மாறா அழகோடு என்பதிலும் நாங்கள் அப்படியே இருக்கிறோம் என்று பறைசாற்ற வேண்டும். மேலும் தனது வயது எந்த இடத்திலும் தெரியக்கூடாது என்பதற்காக தலைக்கு டையை அடித்துக் கொண்டும் முடி கொட்டி விட்டால் அதற்கு விக்கை வைத்துக் கொண்டு செயற்கையான முறையில் உடல் அழகை பாதுகாத்து வருகிறார்கள்.

Rajamouli_updatenews360

இப்படியான நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் தன்னுடைய தலைக்கு விக் மாட்டாமல், முடிக்கு டை அடிக்காமல் இயல்பான லுக்கில் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறியவர் தான் நடிகர் அஜித். அந்த வரிசையில் தனது வயதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பும் நடிகர்களின் வரிசையில் முதலிடத்தில் நடிகர் அஜித் இருக்கிறார் என்பதை நிரூபித்து விட்டார் என ராஜமவுலி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தல அஜித் போல் மனசு யாருக்குமே இருக்காது என்று கூறி இருப்பது தல அஜித்தின் ரசிகர்களை உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது என்றே கூறலாம்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!