கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 450 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்றது. விக்ரம் படம் முழுவதும் லோகேஷின் பேன் பாய் சம்பவமாக அமைந்தது குறித்து அனைவர்க்கும் தெரியும். இப்படத்தில் கைதி, பழைய விக்ரம் போன்ற பல reference பயன்படுத்தி லோகேஷ் ஒரு தனி யூனிவெர்ஸ் படைத்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில், கமல்ஹாசன், லோகேஷ், ப்ரித்விராஜ், ராஜமவுலி உட்பட பலரும் கலந்து கொண்ட ரவுண்ட் டேபிள் மீட்டிங் நடைபெற்றது. அப்போது விக்ரம் படம் குறித்து பேசி இருந்தார்கள். அதில் ராஜமவுலி, விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் கமல் பப்ளிகம் மென்று கொண்டு மீசையை முறுக்கி நடந்து வருவார். அந்த காட்சியை பார்த்து நான் பயங்கரமாக வியந்து விட்டேன். இந்த காட்சி நம்ம படத்தில் இல்லையே என்றெல்லாம் நினைத்திருந்தேன் என்று கூறியிருந்தார்.
உடனே கமல்ஹாசன் அவர்கள், “இந்த காட்சி எடுக்கும் போது நான் பலமுறை பப்ளிக்காம் சாப்பிடுவதை மறந்து விடுவேன். லோகேஷ் தான் அடிக்கடி ஞாபகம் செய்வார்” என்று சொன்னார். இவர்களை தொடர்ந்து லோகேஷ், “இந்த காட்சியை நான் பழைய விக்ரம் படத்தில் இருந்து தான் எடுத்தேன். அந்த படம் முழுவதுமே கமல் சார் பப்ளிகாம் மென்று கொண்டிருப்பார். அதை வைத்து தான் நான் இந்த காட்சியை வைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.