இந்த கூட்டணி சும்மா வேற மாறி.. குட்நைட் நடிகை நடிக்கும் அடுத்த படத்தின் அசத்தல் அப்டேட்!

Author: Hariharasudhan
7 November 2024, 7:48 pm

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார், மீதா ரகுநாத் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ஜோக்கர், குக்கூ ஆகிய வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி, தமிழ் சினிமா ரசிகர்களை ரசிக்க வைத்தவர் இயக்குனர் ராஜுமுருகன். ஆனால், இவரது இயக்கத்தில் கார்த்தியின் 25வது படமாக வெளியான திரைப்படமான ஜப்பான், ஹீரோ, இயக்குனர் என இருதரப்பு ரசிகர்களையும் சோர்வடைய வைத்துவிட்டது.எனவே, இப்படம் சரிவர போகாததால், ராஜூமுருகன் மீண்டும் தனது பழைய நிலைக்கு மசாலாவை மறந்து வர வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ராஜூ முருகன் புதிதாக படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக, இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குட்நைட் பட பிரபலம் நடிகை மீதா ரகுநாத் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் இவர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இந்த காம்போ உறுதி செய்யப்பட்டால், ராஜூ முருகனின் பாணியில் மீண்டும் ஒரு புதுமையான படத்தினைப் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சசிகுமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நந்தன். பட்டியலின தனித் தொகுதியில் நடைபெறும் அரசியலாக வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

அதற்கு முன்னதாக வெளியான கருடன் மற்றும் அயோத்தி ஆகிய திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதேநேரம், குட் நைட் படத்தின் மூலம் பிரபலமான நடிகை மீதா ரகுநாத், சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.

இதன் பிறகு, அவர் 8 தோட்டாக்கள் பட இயக்குனர் ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். சித்தார்த் 40 என தற்காலிக பெயரிடப்பட்டு உள்ள இப்படத்தில், சரத்குமார், தேவையானி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மீதா ரகுநாத்திற்கு, குட் நைட் திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதிலும், மீதா ரகுநாத் போன்ற கதாபாத்திரம் போல் மனைவி, காதலி வேண்டும் என பலரும் கமென்ட் செய்து வந்தனர். ஆனால், அவரோ கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணத்தையே நடத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : காணாமல் போன நகை.. திடீரென பார்த்திபன் வைத்த ட்விஸ்ட்!

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 121

    0

    0