ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!

Author: Selvan
1 February 2025, 9:58 pm

‘ராட்டர்டாம்’ திரைப்பட விழாவில் ராமின்’பறந்து போ’ திரைப்படம்

தமிழ் திரையுலகில் தன்னுடைய தனித்துவமான கதைக்களத்தால் ஆழமான கருத்தை மக்களுக்கு கொண்டு சேர்பவர் இயக்குனர் ராம்.இவருடைய படங்கள் எல்லாமே ஒரு வித காதலுடன்,வாழ்க்கை சார்ந்தவையாக இருக்கும்.

Parandhu Po film festival

அந்த வகையில் தற்போது நடிகர் மிர்ச்சி ஷிவாவை வைத்து ‘பறந்து போ’ என்ற படத்தை இயக்கியுள்ளார்,இதில் ஷிவாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நடித்துள்ளார்.இப்படத்தில் எல்லாத்துக்கும் அடம்பிடிக்கும் குழந்தைக்கும்,வறுமையில் இருக்கும் அப்பாவிற்கும் நடக்கின்ற ஒரு கதையாக உருவாகியுள்ளது.

இதையும் படியுங்க: ‘தொலைச்சுப்புடுவேன்’ உன்னை…மணிகண்டனை மிரட்டிய பிரபல நடிகர்…எதற்குனு தெரியுமா..!

இப்படம் வருகின்ற பெப்ரவரி 4 ஆம் தேதி சர்வேதேச திரைப்பட விழாவான “ராட்டர்டாம்”திரைப்பட விழாவில் திரையிட இருக்கிறது.எப்போதும் ராம் படம் என்றாலே அதற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பார்,ஆனால் பறந்து போ படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.இப்படத்தில் கிட்டத்தட்ட 23 பாடல்கள் உள்ளதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி தன்னுடைய X-தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இயக்குனர் ராம் நிவின் பாலி,சூரியை வைத்து ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை எடுத்து முடித்துள்ளார்,இப்படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்த இரண்டு படங்கள் மூலம் இந்த வருடம் இயக்குனர் ராமுக்கு ஒரு நல்ல ஆண்டாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!
  • Leave a Reply