இறுதிகட்ட படப்பிடிப்பில் ராமின் புதிய படம்..! Shooting spot-ல் எடுக்கப்பட்ட படங்கள் வைரல்.!

Author: Rajesh
1 February 2022, 1:29 pm

இயக்குனர் ராம் ‘பேரன்பு’ படத்துக்குப் பிறகு இயக்கி வரும் புதிய படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கிறார். மேலும் அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. ராம் இயக்கத்தில் வெளியான முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படத்துக்கும் யுவன் இசையமைக்கிறார்.

தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. இந்த நிலையில், நடிகர் நிவின்பாலி, சூரி இயக்குனர் ராம் ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ