ஆண்மை இல்லையா.. இளையராஜாவுக்கு வக்காலத்து வாங்கிய செய்யாறு பாலு.. கிழித்து தொங்க விட்ட பிரபல இயக்குனர்..!
Author: Vignesh13 March 2024, 3:37 pm
பொதுவாக சினிமா நட்சத்திரங்களை பற்றி யாருக்கும் தெரியாத அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ரகசியத்தை சமூக வலைத்தளங்களில் பேட்டி கொடுத்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருபவர் பத்திரிகையாளர் செய்யாறு பாலு. அப்படி இளையராஜாவை பற்றி பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டிருந்த செய்யாறு பாலு அதை 96 மற்றும் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது பற்றி கூறியும் 96 படத்தின் போது இளையராஜா தகாத வார்த்தை ஒன்றை பேசியதால் பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது பற்றியும் செய்யாறு பாலு அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

இதற்கு 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் பதில் கொடுத்துள்ளார். அதில், இளையராஜாவை உயர்த்திப் பேச வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தாழ்த்தி பேசாதீர்கள். மேலும், அப்பாடல்களை பயன்படுத்தும் முன் பணம் கொடுத்து முறையான அனுமதி பெற்று விட்டோம். படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாக அவர் சொல்வது முற்றிலும் தவறு. சினிமா என்பது சினிமா துறையினருக்கு மட்டுமல்ல அதைப்பற்றி செய்தியாக வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கும் சொந்தமானது எனவும், அதை பாதுகாப்பது இருவரின் கடமை எனவும் குறிப்பிட்டு இயக்குனர் பிரேம்குமார் பேசியிருந்தார்.