விஜய் மட்டுமில்ல இவரும் எஸ்.ஏ.சி மூலமா தான் சினிமாவுக்கு வந்தாரா: எஸ்.ஏ.சி பெருமிதம் யார் அவரு..?

Author: Rajesh
2 February 2023, 7:00 pm

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

SAChandrasekar_Updatnews360

மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜய் அவர்களை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் அவர்கள் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார். புரட்சி இயக்குனர் என அழைக்கப்படும் அளவிற்கு அவர் எடுத்த பெரும்பாலான படங்கள் சட்டம் சார்ந்தவையாகவும், புரட்சிக் கருத்துக்களை அடிப்படையாக கொண்டும் அமைந்திருக்கும். விஜயகாந்தை வைத்து தான் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.

Vijay - Updatenews360

நடிகர் விஜய் மாதிரியே திரையுலகில் இவர் அறிமுகப்படுத்திய இன்னொருவரை பற்றி எஸ்.ஏ.சி அதிகம் பெருமைப்பட்டு பேசும் ஒருவரும் உள்ளார். எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குனர்களாக இருந்த பலர், தமிழ் சினிமாவே பெருமையாக கருதும் அளவுக்கு இயக்குனர்களாக வலம் வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் இயக்குனர் சங்கர், இயக்குனர் பவித்ரன், இயக்குனர் பொன்ராம்.

Shankar At The 2.0 Trailer Launch- updatenews360

இதில் இயக்குனர் சங்கர் எஸ்.ஏ.சியிடம் 17 படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறாராம். இதைப் பற்றி மனம் திறந்த எஸ்.ஏ.சி இதுவரை யாரும் என்னிடம் இப்படி இருந்ததில்லை. இரண்டு, மூன்று படங்களில் வெளியே போய்விடுவார்கள். சங்கர் மட்டும் தான் 17 படங்களில் கூடவே இருந்தார். உதவி இயக்குனராக சங்கர் இருந்த போது அவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்தது. ஆனால் இன்னும் கொஞ்ச நாள் இருந்து கற்றுக் கொண்டு போகிறேன் என்று கூடவே இருந்தார் என்று எஸ்.ஏ.சி என கூறியுள்ளார். இதன் மூலம் நான் பார்த்து வியந்ததில் இரண்டு பேர், ஒன்று விஜய் மற்றொருவர் சங்கர் என்று எஸ்.ஏ.சி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 514

    0

    0