எழுதி வெச்சுக்கோங்க அடுத்த சூப்பர் ஸ்டார் TTF வாசன்.. பகீர் கிளப்பிய இயக்குனர்..!

Author: Vignesh
22 August 2023, 4:45 pm

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து, அதனை வீடியோவாக பதிவிட்டு 2″கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

manjal veeran ttf -updatenews360

சமூக வலைதளங்களில் பிரபலமான டிடிஎஃப் வாசன் போக்குவரத்து விதிகளை மீறியதால் புகாரில் சிக்கி பிரபலமானது தான் அதிகம் என்று சொல்லலாம். அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் செல்அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

manjal veeran ttf -updatenews360

அதற்கான போஸ்டரும் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி தயாரிப்பில் உருவாகும் மஞ்சள் வீரன் படத்திற்காக TTF வாசன் சுமார் 1.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

manjal veeran ttf -updatenews360

ஆரம்பத்தில் அஜித் விஜய் சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அறிமுகமாகிய படத்திற்கு லட்சத்தில் தான் சம்பளம் பெற்று வந்தனர். ஆனால், யூடியூப் மூலம் பிரபலமாகி முதல் படத்திலேயே கோடியில் சம்பளம் வாங்கி உள்ளது தமிழ் சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

manjal veeran ttf -updatenews360

இதனிடையே, படம் ஆரம்பித்து சில நாட்களில் TTF வாசனின் கார் பைக்கில் சென்ற ஒரு நபரின் மீது மோதி சர்ச்சையாகி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே, யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பல சர்ச்சைகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில், தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் டிடிஎஃப் வாசன் என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர் செல்அம் கூறியுள்ளார். இதனால், மீண்டும் இந்த சர்ச்சை வைரலாக தொடங்கிவிட்டது.

இவர் அளித்த பேட்டியில், கடவுளின் அனுகிரகம் TTF வாசனுக்கு இருக்கிறது, எழுதி வெச்சுக்கோங்க அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக எல்லா தகுதியும் TTF வாசனுக்கு இருக்கு’ என இயக்குனர் செல்அம் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 445

    0

    0