ஜோ மீது சந்தேகம்.. பலமுறை திட்டிய பிரபலம்: மூளையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்த ஜோதிகா..!
Author: Vignesh28 December 2023, 6:00 pm
புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .
முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி கலக்கி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டியில் கலந்து கொண்ட இயக்குனர் மணி பாரதி நடிகை ஜோதிகா பற்றிய சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்த ஜோதிகா இந்த அளவிற்கு வருவார் என்ற நம்பிக்கை இருந்ததா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ஜோதிகா மீது எனக்கு சந்தேகம்தான் அதிகமாக இருந்தது. காதலுக்கு மரியாதை படத்தில் ஹிந்தி ரீமேக்கில், ஜோதிகா தான் அறிமுகமாகி நடித்திருந்தார். அந்த படம் பிளாப் படமானது. நக்மாவின் தங்கை என்ற அறிமுகத்தை வைத்து தான் இங்கே தமிழில் அறிமுகம் செய்தார்கள்.
பூவெல்லாம் கேட்டுப்பார் படம் பெரிதாக ஓடும் என்று நான் நினைக்கவில்லை. மதில் மேல் பூனை போன்ற கதையைத்தான் இயக்குனர் வசந்த் எடுப்பார். அதில், எங்களுக்கு சந்தேகம்தான் வந்தது. அப்படி ஆரம்பிக்கும் போது சூர்யாவுக்கு அது இரண்டாம் படம் ஜோதிகாவுக்கு, அது அறிமுகம் படமாக இருந்தது. சூர்யாவை எப்படி வசந்த் சார் திட்டுவாரோ அதேபோலத்தான் ஜோதிகாவையும் திட்டுவார். பயங்கரமா திட்டுவார் அதனால், கோபித்துக் கொண்டு மூளையில் உட்கார்ந்து ஜோதிகா அழ ஆரம்பித்து விடுவார். அதைப் பார்த்த அவரது அம்மா தயாரிப்பாளர் சுப்புவை வரவைத்து எங்களுக்கு இந்த படமே வேண்டாம் என் பொண்ணு நக்மா சங்கர் இயக்கத்தில் நடித்திருக்கிறார்.
அவர் அவ்வளவு பெரிய இயக்குனர் அவர் கூட இப்படி திட்ட மாட்டார். இவர் இப்படி திட்டுறாரே இன்றே டிக்கெட் போடுங்கள். நாங்கள் கிளம்புகிறோம் என்று கூறியிருந்தார். பின்னர், அவர்களை சமாதானப்படுத்தி ஜோதிகாவை நடிக்க வைத்தோம். இதே போல், பலமுறை வசந்த் சாரிடம் திட்டு வாங்கி நடித்தார்கள். ஆனால், சூர்யாவுக்கு ஜோதிகா மனைவியாவார்கள் என்று நினைக்கவில்லை என்று மணி பாரதி தெரிவித்துள்ளார். அப்படத்தில், காதல் வரவில்லை காக்க காக்க படத்தில் தான் இருவருக்கும் காதல் வந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.